அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழுவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், காலி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத…

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்த குழுவுக்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், காலி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில், அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்திற்குள் ஒருவர் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்வதுடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது தந்தையை பொலிஸார் தாக்கியதாக குற்றம் சாட்டுவது பதிவாகியுள்ளது.

பொலிஸாரின் விளக்கத்தின்படி, குறித்த முதியவர் கடந்த 24ஆம் திகதி இரவு போதையில் வீதியில் ஒழுங்கற்ற முறையில் நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது தப்பிச் செல்ல முயன்றதில் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ அதிகாரியின் பரிசோதனைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.