யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.அத்துடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டம…
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக தவறான முடிவெடுத்து உயிரிழக்கும் சம்பவங்கள் கவலைக்கிடமாக அதிகரித்து வருகின்ற நிலையில், அவற்றைத் தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.அத்துடன், அதற்கான ஒருங்கிணைந்த கட்டமைப்புகளை மீளச் செயற்பாட்டு நிலைக்குக் கொண்டுவர விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (11.8.2026) மாலை நடைபெற்ற விசேட உயர்மட்ட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்தப் பணிப்புரையை வழங்கினார்.உயிரிழப்புகள் கலந்துரையாடலில், யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 80 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டது. தேசிய மட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 15 பேர் என்ற விகிதத்துடன் ஒப்பிடுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு சுமார் 30 பேர் என்ற அளவில் இவ்வாறான உயிரிழப்புகள் பதிவாகி வருவதாக மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் இந்தப் போக்கு அதிகரித்து வருவதும் கவலைக்குரிய விடயமாகக் குறிப்பிடப்பட்டது.சுகாதாரத் துறை மது பாவனைக்கு அடிமையாதல், குடும்ப வன்முறை, குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான தொடர்பாடல் குறைவு, பெற்றோர் – பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் – மாணவர்கள் இடையிலான நெருக்கம் குறைவடைதல், தனிமை, சமூக மற்றும் உளவியல் அழுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்நிலைக்கு செல்வாக்குச் செலுத்தி வருவதாக மருத்துவ நிபுணர்கள் கலந்துரையாடலில் எடுத்துரைத்தனர்.இந்தச் சவாலை எதிர்கொள்வதற்கு சுகாதாரத் துறையின் முயற்சிகள் மட்டும் போதுமானதல்ல் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பங்களிப்பும் அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.












