வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை இன்று(03.07.2026)எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்…

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஏனையோருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட பிடியாணை நீதிமன்றத்தினால் மீளப் பெறப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணை இன்று(03.07.2026)எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராடினார்கள் என்ற காரணத்திற்காக பலாலி பொலிஸாரினால் வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினரும் காணி உரிமையாளருமான சாருஜன் உள்ளிட்ட ஐவர் பலாலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பிணையில் மேற்குறிப்பிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிடியாணை உத்தரவு இது தொடர்பான வழக்கு நேற்று(02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தையிட்டி விவகாரத்துடன் தொடர்புப்பட்ட நபர்கள் வழக்குகளுக்கு சமூகம் தராத நிலையில், அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் இன்று(03.07.2026) வெள்ளிக்கிழமை உடனடியாகவே நீதிமன்றில் முன்னிலையாகி வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் சட்டத்தரணி கஜேந்திரன் ஊடாக மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அதன் பின்னர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை உத்தரவு மீளப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.