தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்துவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் தொடர்ப…
தயாசிறி ஜயசேக்கர ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்துவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் தொடர்பான இரண்டாம் நாள் ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்து கொண்டு நேற்று (26.06.2026) உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர்,தயாசிறி ஜயசேக்கரவுக்கு எதிரான விசாரணைதயாசிறி ஜயசேக்கர எனக்கெதிரான கருத்துக்களை தெரிவித்து ஒழுக்காற்று விசாரணை இல்லையா என குறிப்பிட்டிருந்தார். எனக்கு ஒழுக்காற்றுப் பரிசோதனை நடத்துவதற்கு நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஜனாதிபதி நிதியத்திலிருந்து பணம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் விசாரணை ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அந்த விசாரணைக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு தயாசிறி போலியாகத் தயாரிக்கப்பட்ட பில்களை (Bills) சமர்ப்பித்துள்ளார். தனக்கு ஜனாதிபதி நிதியத்தில் கிடைத்த பணத்தை விட அதிக செலவு செய்ததாகவும் அதை தானே பொறுப்பேற்றுக் கொண்டதாக போலியான பற்றுச்சீட்டுகளை சமர்ப்பிப்பவர்கள், இங்கு வந்து மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள். தங்களை மிகவும் தூய்மையானவர்கள் என்று காட்டிக்கொண்டு இங்கு வந்து மற்றவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்கள். இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே, இது குறித்து இந்த நேரத்தில் நான் மேலதிகமாக எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால், சிலர் தங்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறில்லை நான் முன்பே கூறியதைப்போல இவை எதுவும் அரசியல் ரீதியானவை அல்ல.நாங்கள் பொலிஸாருக்கு சுதந்திரம் வழங்கியுள்ளோம். சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். அவர்களுக்குத் தேவையான தலைமையத்துவத்தை நாங்கள் வழங்குகிறோம் என குறிப்பிட்டார்.

