தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ‘தினன துகுண’ (வெல்லும் தெற்கு) அமைப்பினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் தங்களத…

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ‘தினன துகுண’ (வெல்லும் தெற்கு) அமைப்பினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு   சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்றப் பதவிக்கு உரிய சலுகைகள் மற்றும் படிகளைப் பெறும் நோக்கத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டதன் ஊடாக, ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் துரித விசாரணை ஒன்றை நடத்துமாறு கோரி, ‘தினன துகுண’ அமைப்பு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் புதன்கிழமை (02) காலை கோரிக்கை விடுத்து குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்தது.