யாழ்ப்பாணம், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து…

யாழ்ப்பாணம், வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி (NPP) உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன், தனியார் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

குறித்த தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட குழுவினர், நெல்லியடிப் பகுதியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியதுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கெமராகளையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. வீட்டுவாசிகள் சம்பவம் குறித்துப் பொலிஸாருக்குத் தெரிவித்ததை அடுத்து, அக்குறிப்பிட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தியின் குறித்த பிரதேச சபை உறுப்பினர் தனது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.