வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள், புதுடெல்லியில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சினால் நேற்று (19) அதிகாரப்பூர்வமாக அறி…

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

இந்தியத் திரைத்துறையின் மிக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள், புதுடெல்லியில் உள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சினால் நேற்று (19) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் இரண்டு முக்கிய பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது.

புஷ்பா2:திரூல் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தெலுங்கு மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தினை சுகுமார் இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. அல்லு அர்ஜுன் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜெகபதி பாபு, தனஞ்சயா, ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இது 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும்.

புஸ்பா2திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்களின் தோற்றங்களையும், ஆடை வடிவமைப்புகளையும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கியதற்காக ஆடை வடிவமைப்பாளர்கள் ‘ஷீத்தல் சர்மா’ மற்றும் ‘தீபாலி நூர்’ ஆகியோருக்கு ‘சிறந்த ஆடைவடிவமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆடை வடிவமைப்பு மட்டுமின்றி, இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சுகுமாருக்கு, ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறந்த திரைக்கதைக்காக ‘சிறந்த அசல் திரைக்கதை’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.