(நமது நிருபர்) தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான…

(நமது நிருபர்) தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 3 பில்லியன் டொலர் பொருளாதாரமாக கட்டியெழுப்புவது தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் தெங்கு மற்றும் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தி தொழிற்துறையினருக்கும் இடையிலான கலந்துரையாடல், ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (26) நடைபெற்றது. அதன்படி, தெங்கு சார்ந்த ஏற்றுமதித் துறையை 2 பில்லியன் டொலராகவும், உணவுப் பொருட்கள் சார்ந்த ஏற்றுமதித் துறையை 1 பில்லியன் டொலராகவும் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்குரிய திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஏற்றுமதி பன்முகப்படுத்தல் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டிய எந்தவொரு ஆதரவையும் வழங்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.