உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் த…
உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது, நாட்டில் முடங்கியுள்ள 1.1 மில்லியனுக்கும் அதிகமான வழக்குகளை விரைவாக முடிப்பதற்கே என்ற அரசாங்கத்தின் கூற்றை நிரூபித்துக் காட்டுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார் ஜி.எல்.பீரிஸ் சவால் விடுத்துள்ளார்.கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே முன்னாள் வெளியுறவு அமைச்சரான ஜி.எல்.பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர், "அரசாங்கம் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடும் 1.1 மில்லியன் வழக்குகளில், மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் வெறும் 1 சதவீதம் மாத்திரமேயாகும்.1 வீத வழக்குகள்.. இந்த உண்மையைத் மறைத்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்ந்தும் அப்பட்டமான பொய்களைக் கூறி வருகின்றது. மேலும், நீதிமன்ற வழக்குகளின் தாமதம் குறித்து அரசாங்கத்திற்கு உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால், உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் காலியாக உள்ள 8 நீதிபதி இடங்களை இந்நேரம் நிரப்பியிருக்கும்.அதனைச் செய்யாமல் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர முற்படுவது அவர்களின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 இலிருந்து 65 ஆகவும் உயர்த்தப்படவுள்ளது. அத்துடன் தலைமை நீதிபதி 67 வயதை அடைந்தவுடன் அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் திட்டம்.. நீதித்துறையை நிறைவேற்று அதிகாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதே இந்த 22ஆவது திருத்தத்தின் உண்மையான நோக்கமாகும். இது ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான முதற் படி. வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இந்தத் திருத்தச் சட்டம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சவால் செய்யவுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, நிலுவையில் உள்ள 1.1 மில்லியன் வழக்குகளில் சுமார் 96 சதவீதமானவை நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களிலேயே காணப்படுவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் கிடைக்கப்பெற்ற பரிந்துரைகளைப் புறந்தள்ளி, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதே 22ஆவது திருத்தத்தின் மறைமுக நோக்கம் என குற்றம் சாட்டியுள்ள அவர், ஸ்டாலினிச பாணி நிர்வாகத்தை நிறுவ முனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சித்தரித்து அழிக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.












