ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின…

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் எல் நினோ காரணமாக, உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டிய நாடுகளுள் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டின் இயல்பான மழை அளவைக் காட்டிலும் அதிகமான மழைவீழ்ச்சி, வெள்ள அபாயம் அதிகரிப்பு மற்றும் எரிபொருள், உரங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் போன்ற தொடர்ச்சியான பொருளாதார சுமை ஆகியவற்றுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.எல் நினோ தாக்கம்

புதிய பிராந்திய மதிப்பீட்டு அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு , உலக உணவுத் திட்டம், ஐநா பெண்கள் அமைப்பு, உலக வானிலை அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமை விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான அலுவலகம் ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.ஆசிய பசிபிக் பிராந்தியமானது மிகவும் சிக்கலான மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வலுவடைந்து வரும் எல் நினோ, சாதகமான இந்தியப் பெருங்கடல் இருமுனை மற்றும் மத்திய கிழக்கு நெருக்கடியின் தொடர்ச்சியான பொருளாதாரத் தாக்கங்கள் இதற்கு காரணமாக கூறப்படுகின்றது.

தற்போதைய எல் நினோ பதிவுகளில் வலிமையான ஒன்றாக அமையக்கூடுவதுடன், 2027 ஆம் ஆண்டு வரை நீடிக்கக்கூடும்.இலங்கைக்கு முக்கிய அச்சுறுத்தல்  இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பப்புவா நியூ கினி போன்ற நாடுகளில் வறட்சி அபாயம் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முக்கிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மதிப்பீடானது இலங்கையை உயர்ந்த கவலைக்குரிய நாடுகளின் பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரிக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெய்யக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையின் இரண்டாவது இடைப்பருவ காற்று வீசும் காலமான ஒக்டோபர் மாதம் முதல் இந்த ஆபத்து குறிப்பாக முக்கியத்துவம் பெறுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

இது பாரம்பரியமாக ஆண்டின் அதிக மழை பெய்யும் காலங்களில் ஒன்றாகும், இதனைத் தொடர்ந்து ஈசான் பருவமழையும் ஆரம்பமாகிறது.