தமிழக முதல்வர் விஜய் தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி வரும் நிலையில், நடிகை திரிஷாவுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ம…
தமிழக முதல்வர் விஜய் தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களுக்கு அரசு உயர் பதவிகளை வழங்கி வரும் நிலையில், நடிகை திரிஷாவுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தற்போதைய த.வெ.க ஆட்சியில் ஜெகதீஷ் பழனிச்சாமி, ஜான் ஆரோக்கியசாமி, ராஜன் பண்டிட், வெங்கட்ரமணா போன்ற தனது மிக நெருக்கமான நண்பர்களுக்கு அடுத்தடுத்து முக்கிய அரசுப் பதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார்.கடும் விமர்சனம் இந்த வரிசையில் ஜனநாயகத்தில் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் நிலவுவதால், விஜயின் நீண்ட கால தோழியும், நடிகையுமான திரிஷாவுக்கும் விரைவில் துணை முதல்வர் பதவிக்கான அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.சினிமா பிரபலங்களின் நட்பு வட்டாரங்களுக்குப் பதவிகள் வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி முன்னாள் அமைச்சர் பேசிய இந்த பேச்சு, தற்போது சமூக ஊடகங்களிலும், அரசியல் மேடைகளிலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதற்கு த.வெ.க தரப்பில் இருந்து என்ன மாதிரியான பதிலடி வரப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

