திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கு…
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில், வெளிநாடுகளில் பணிபுரியும் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (11) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 114 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், திருகோணமலை மாவட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இக்கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

