துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது, இலங்கை துறைமுக அத…

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதியமைச்சர் ஜனிக்க ருவன் கொடிதுவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.டபிள்யூ. மங்கள ஆகியோருடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்திற்கு விசேட அவதானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது, இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் துறைமுகத்தின் தற்போதைய செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த திருகோணமலை துறைமுக இருப்பிட முகாமையாளர் சரத் குமார, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் துறைமுகத்தின் செயற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.அவரது விளக்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் திருகோணமலை துறைமுகம் 1,192 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே 958 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.

துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் வருவாய் உயர்வை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் விஜயத்தின் போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சர் அருண் ஹேமசந்திர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷான் அக்மீமன, பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.