கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் உடனடியாக மீட்கப்பட்ட…

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று சனிக்கிழமை (27) அதிகாலை பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்று தியத்தலாவை ரயில் பாதைக்கு அருகில் சுமார் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 42 பேர் உடனடியாக மீட்கப்பட்டு தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.