நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த நிலையங்கள் வழக்கம் போன்று இயங்குவது கடினமாகியுள்ளதாகவும், மாவநெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப…

நாட்டில் ஏற்பட்டுள்ள கனமழை காரணமாக, அசுபினி எல்ல மற்றும் மாவநெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான நீர் எடுக்கும் இடங்கள் அடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்த நிலையங்கள் வழக்கம் போன்று இயங்குவது கடினமாகியுள்ளதாகவும், மாவநெல்ல மற்றும் அரநாயக்க பிரதேச செயலகப் பிரிவுகளுக்கான நீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்விநியோகம் தடை மாவநெல்ல முதல் கரந்தன சந்திப்பு வரையிலும், மாவநெல்ல - ரம்புக்கான சாலை நெடுகிலும் உள்ள பகுதிகளுக்குக் குறைக்கப்பட்ட அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

வானிலை இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், நீர் எடுக்கும் இடங்களைச் சுத்தம் செய்து, நிலையங்களை மீண்டும் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கூடிய விரைவில் இயல்பான நீர் விநியோகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.