இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் முன்ன…
இறுதிப்போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான மர்ம மரணங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று வலியுறுத்தியுள்ளது.
அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.சர்ச்சைக்குரிய உயிரிழப்புகள்
நாட்டில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய உயிரிழப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், இது குறித்துத் தனது கடும் சந்தேகங்களை வெளிப்படுத்தினார். "323 கொள்கலன் விவகாரத்தில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டான் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார். எயார் பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார். 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் விவகாரத்தில் தொடர்புடைய திறைசேரி அதிகாரி ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மரணத்திலும் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன. தற்போது முன்னாள் பொலிஸ்மா அதிபர் உயிரிழந்துள்ளார். இவை அனைத்தையும் சாதாரண தற்கொலைச் சம்பவங்களாகக் கடந்துவிட முடியாது." - என்று அவர் குறிப்பிட்டார்.தொடர் மரணங்களின் பின்னணி"இத்தகைய தொடர் மரணங்களின் பின்னணியில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர, தற்போதைய அரசுக்குப் போதிய திறனோ அல்லது வலிமையோ இல்லை என்பது தெளிவாகின்றது. எனவே, இவற்றை முறையாக விசாரணை செய்வதற்கு எவ்.பி.ஐ. போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியை அரசு நாட வேண்டும்." - என்று கோரிக்கை விடுத்தார்.
கடந்த காலங்களில் சர்வதேச விசாரணைகளை எதிர்த்து வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தற்போது அதேபோன்றதொரு கோரிக்கையை முன்வைத்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

