வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின் மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது. பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நா…

வெனிசுலா நாட்டின் சீரழிந்த எண்ணெய் துறைமுக முனையங்கள் காரணமாக, அந்நாட்டின் மீளெழுச்சி பெற்றுவரும் மசகு எண்ணெய் ஏற்றுமதி கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளது.

பழமையான உட்கட்டமைப்புகள், மின்சாரத் தடை மற்றும் தரப் பிரச்சினைகள் காரணமாக கப்பல்களில் எண்ணெயை ஏற்றுவதற்கு சுமார் 30 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்துத் தரவுகள் மற்றும் துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்கட்டமைப்புச் சிக்கல்கள் அமெரிக்காவுடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை விரைவாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், இவ்வாறான உள்கட்டமைப்புச் சிக்கல்கள் பெரும் தடையாக உருவெடுத்துள்ளன.

மசகு எண்ணெய் உற்பத்தி உயர்வடைந்துள்ள போதிலும், துறைமுகங்களின் பலவீனமான நிலைமை காரணமாக அண்மைக்காலமாக நாளொன்றிற்கு 1.25 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல் நிலவுகின்றது. குறிப்பாக, நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீதத்தைக் கையாளும் ஹோசே துறைமுகப் பகுதியில் எண்ணெயைப் பெற்றுக்கொள்வதற்காக ஏராளமான கப்பல்கள் நங்கூரமிட்டு பல நாட்கள் காத்திருக்கின்றன.

ஏற்றுமதியை அதிகரிக்கத் திட்டம்பழமையான உள்கட்டமைப்புகளைப் புதுப்பிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படாத நிலையில், ஏற்றுமதி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் துறைமுகங்கள் திணறி வருகின்றன. அத்துடன், காத்துக்கிடக்கும் கப்பல்களுக்கான தாமதக் கட்டணங்கள் மற்றும் தரப் பிரச்சினைகள் தொடர்பில் பிணக்குகள் எழுந்துள்ளது.

இந்த நிலையில், துறைமுகங்களின் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தங்கள் வசமே வைத்திருக்க அரசுக்குச் சொந்தமான பி.டி.வி.எஸ்.ஏ நிறுவனம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening