சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாயட பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட…

சர்வதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றும் தனது 25 வயதுடைய மனைவியை சட்டத்தரணியாக்குவதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கணவனும், அந்த ஆசிரியை மனைவியும் சுமார் இரண்டு கோடி ரூபாயட பெறுமதியான 'ஐஸ்' (Ice) போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான கணவனின் வசம் 1 கிலோகிராம், 6 கிராம், 350 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், சந்தேக நபரான ஆசிரியையின் வசம் 149 கிராம், 150 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வேனொன்றின் முன்பகுதியில் வைத்து மாதம்பிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாதம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நளின் ஸ்ரீயந்தவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, குறித்த சந்தேக நபர் தம்பதியினர் மாதம்பிட்டிய உள்ள ஒரு மதஸ்தலத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தம்பதியினர் பயணித்த வேனைச் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்து இந்த ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, இவை வத்தளை (வெலிசர) பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.