டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்யில் ஓடிய டிப்பர் வாகனம் பறிமுதல் : சாரதி கைது! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம், நேற்று ஞாய…

டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்யில் ஓடிய டிப்பர் வாகனம் பறிமுதல் : சாரதி கைது!

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, போக்குவரத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தளாய் – அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று காலை ஏழு மணியளவில் போக்குவரத்து பொலிஸார் வழமையான வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த டிப்பர் வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த வாகனம் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் மூலம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. சுகத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினரே இந்த அதிரடி சோதனையை முன்னெடுத்து, சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.