அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான 'ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னொலஜி குரூப்', தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் ஜனாதிபதி வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே உடனுக்குடன் வழங்குவதற்காக மாதம் $100,000 நிதியைக் கட்டணமாக அறவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமூக ஊடக நிறுவனமான 'ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னொலஜி குரூப்', தனது 'ட்ரூத் சோசியல்' தளத்தில் ஜனாதிபதி வெளியிடும் பதிவுகளை மற்றவர்களுக்கு முன்னதாகவே உடனுக்குடன் வழங்குவதற்காக மாதம் $100,000 நிதியைக் கட்டணமாக அறவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி ஒருவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் உலகப் பொருளாதாரச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், நிதி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளைக் குறிவைத்து இந்தத் திட்டம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

மேலும், மூன்று ஆண்டுத் திட்டமாகப் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு மாதக் கட்டணமாக $60,000 வசூலிப்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது.வணிகத் திட்டம் ட்ரம்பின் இந்த வணிகத் திட்டம் அமெரிக்காவில் பெரும் தார்மீக மற்றும் சட்ட ரீதியான விவாதங்களை எழுப்பியுள்ளது.

ஜனாதிபதி பதவியைப் பயன்படுத்தி ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் இலாபம் ஈட்ட முயல்வதாவும், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு இது முட்டுக்கட்டையாக அமையும் என்றும் அரசியல் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு அப்பட்டமான ஊழல் நடவடிக்கை என்றும், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பணத்திற்காக முன்கூட்டியே விற்பது அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.ஈரான் மீதான தாக்குதல்

கடந்த காலங்களில் ஈரான் மீதான தாக்குதல் அறிவிப்புகள் மற்றும் வர்த்தகக் கொள்கை மாற்றங்கள் போன்ற முக்கிய விவகாரங்களை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் தளத்தின் மூலமே அறிவித்திருந்தார். இதனால் உலக எரிசக்தி மற்றும் நிதிச் சந்தைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. தற்போது கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய கட்டண சேவை, தங்களுக்குப் பிடித்தமான பணக்கார வர்த்தகர்களை மேலும் பணக்காரர்களாக்கவும், ஜனாதிபதி ட்ரம்ப் குடும்பத்தினர் கல்லா கட்டவுமே உதவும் என்று எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்பிக்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.