ஸ்பெயின் நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) வர்த்தக உடன்படிக்கை ஒழுங்குவிதிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது. துருக்கியின் தலைநகர் அங்…

ஸ்பெயின் நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டிக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான (EU) வர்த்தக உடன்படிக்கை ஒழுங்குவிதிகளை அமெரிக்கா மதிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

துருக்கியின் தலைநகர் அங்காராவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் மீதான போருக்கு ஸ்பெயின் ஆதரவளிக்கவில்லை எனவும், நேட்டோ (NATO) அமைப்பில் அதுவொரு "மோசமான கூட்டாளி" எனவும் கடுமையாக விமர்சித்தார்.

அத்துடன், ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத் தொடர்புகளையும் உடனடியாக இரத்துச் செய்யுமாறு தனது திறைசேரி செயலாளருக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.ஐரோப்பிய ஆணைக்குழு அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அதிரடி அச்சுறுத்தலைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள ஐரோப்பிய ஆணைக்குழுவின் (EC) ஊடகப் பேச்சாளர் ஓலாஃப் கில், கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஐரோப்பிய ஒன்றியம் கையெழுத்திட்ட கூட்டு அறிக்கையை நினைவூட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் தனது கடப்பாடுகளை முறையாகப் பின்பற்றுவதைப் போல, அமெரிக்காவும் அந்த உடன்படிக்கையின் கீழ் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக மதித்து நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தினதும் அதன் உறுப்பு நாடுகளினதும் நலன்களையும் உரிமைகளையும் ஐரோப்பிய ஆணைக்குழு எப்போதும் முழுமையாகப் பாதுகாக்கும் எனவும், இருதரப்புக்கும் பயனளிக்கக்கூடிய நிலையான, அட்லாண்டிக் கடந்த வர்த்தக உறவை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.