டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாத்தே சத்து ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் படையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதன்படி,…
டுபாயில் தலைமறைவாகியிருந்ததாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களான கொண்ட ரஞ்சீ, அல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாத்தே சத்து ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் படையினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, கடந்த ஆண்டு டுபாயில் கைது செய்யப்பட்ட பஸ் லலித் என்பவரை எதிர்வரும் திங்கட்கிழமை (24) இலங்கைக்கு அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று டுபாய் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இலங்கை குற்றவாளிகள் நால்வர் கொண்ட ரஞ்சீ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அல்டோ தர்மே என்பவர் குற்றச்சாட்டு எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொழும்பு பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் இடம்பெற்ற பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள வனாத்தே சத்து என்பவரும் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத் தரப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அழைத்து வர நடவடிக்கை
இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம், மத்திய குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் அரச புலனாய்வுச் சேவை ஆகியவை டுபாய் பாதுகாப்புத் தரப்புடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் நேரடி கண்காணிப்பிலும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்குவின் வழிகாட்டுதலிலும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பஸ் லலித்தை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக டுபாய் சென்றுள்ளனர்.
ஹங்வெல்ல பகுதியில் பல்வேறு கொள்ளை, கப்பம் பெறுதல் மற்றும் கொலைச் சம்பவங்களுடன் பஸ் லலித் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












