உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி,இன்றையதினம்(28.6.2026) WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.23 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அதேவேளை, சர்வதேச அளவி…
உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதன்படி,இன்றையதினம்(28.6.2026) WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.23 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, சர்வதேச அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.99 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.வீழ்ச்சி
இதனுடன், இயற்கை எரிவாயுவின் விலையும் இன்று வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.279 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. உலகளாவிய எரிசக்தி தேவையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உற்பத்தி நிலவரம் மற்றும் சர்வதேச பொருளாதார சூழ்நிலைகள் ஆகியவை எரிசக்தி விலைகளில் தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி வருவதாக சர்வதேச சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

