உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்க…

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (01.09.2026) சற்று சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல் மற்றும் இவ்வாரம் வெளியிடப்படவுள்ள முக்கிய அமெரிக்க தொழிலாளர் சந்தை தரவுகள் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துவது இதற்கு காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு அவுன்ஸ் உடனடி தங்கத்தின் விலை 0.3% குறைந்து, 4,437.10 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.தங்க விலையின் மீதான அழுத்தம்இதற்கிடையில், ஈரான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் விளைவாக, மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதுடன், தொடர்ந்து இரண்டாவது நாளாக எண்ணெய் விலைகளும் உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலைகள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15