வட அயர்லாந்தில் வசிக்கும் ஒரு வயதுடைய 'பில்லி' (Billy) எனும் பூனை, கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் குறித்து வழங்கிய துல்லியமான கணிப்புகளால் உலகப் புகழ்பெற்றுள்ளது. போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளில், தமக்கு விருப்பமான அல்லது வெற்றிபெறக்கூடிய நாட்டின் கொடியின…
வட அயர்லாந்தில் வசிக்கும் ஒரு வயதுடைய 'பில்லி' (Billy) எனும் பூனை, கால்பந்து உலகக் கோப்பை போட்டிகள் குறித்து வழங்கிய துல்லியமான கணிப்புகளால் உலகப் புகழ்பெற்றுள்ளது.
போட்டியில் பங்கேற்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளில், தமக்கு விருப்பமான அல்லது வெற்றிபெறக்கூடிய நாட்டின் கொடியின் மீது தனது பாதத்தை வைத்துத் தட்டுவதன் மூலம், உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் வெற்றியாளர்களை இப்பூனை மிகச் சரியாகத் தேர்ந்தெடுக்கும் தனித்துவத்தைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக, சமூக வலைதளங்களில் இந்தப் பூனை பெரும் பிரபல்யத்தை அடைந்துள்ளது.
பில்லியின் உரிமையாளரான சீனப் பெண்மணி லீ, உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே தனது பூனை வழங்கிய தீர்மானங்களை இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கில் பதிவேற்றியதாகக் குறிப்பிடுகிறார். இவரது கணவர் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

