ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர். இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரின் ஆர்…

ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக வெற்றியைக் கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக, ஸ்பெயினின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரின் ஆர்போல் கோர்டோ நீரூற்று அருகே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.திங்கட்கிழமை அதிகாலை கொண்டாட்டங்கள் உச்சத்தை எட்டியபோது, பலர் நீரூற்றின் மேல் பகுதியில் ஏறி நின்றதால் அதன் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து சியுடாட் ரோட்ரிகோ நகர மன்றம், உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.மேலும், உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நகரில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், மாநகரக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.