மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், வர்த்தகப் பிரிவினை மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் போன்ற காரணங்களால் 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.0 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. இது ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்டதை விடக் குறைவான மட்டமா…

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், வர்த்தகப் பிரிவினை மற்றும் ஹோர்முஸ் நீரிணை முடக்கம் போன்ற காரணங்களால் 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார வளர்ச்சி 3.0 சதவீதமாகக் குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. இது ஏப்ரல் மாதம் கணிக்கப்பட்டதை விடக் குறைவான மட்டமாகும்.

எனினும், தொழில்நுட்பத் துறையின் அசுர வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான முதலீடுகள் காரணமாக உலகப் பொருளாதாரம் போரின் அதிர்ச்சியை ஓரளவு தாங்கி மீண்டுள்ளதாக ஐஎம்எஃப் தனது உலகப் பொருளாதார அவுட்லுக் (WEO) அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.உலகளாவிய பணவீக்கம் வரும் 2027 ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி மீண்டும் 3.4 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய பணவீக்கம் 4.7 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.ஜூலை நடுப்பகுதியில் ஹோர்முஸ் நீரிணை படிப்படியாகத் திறக்கப்படும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த புதிய கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு நாடுகளின் பொருளாதார நிலை அமெரிக்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பு மாற்றமின்றி 2.3 சதவீதமாகப் பேணப்பட்டுள்ளது.வளர்ச்சி கணிப்பு ஐரோப்பிய நாடுகளின் வளர்ச்சி 1.1 சதவீதத்தில் இருந்து 0.9 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஜப்பானின் வளர்ச்சி 0.6 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

அதேவேளை, சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக உயரும் என ஐஎம்எஃப் கணித்துள்ளது.

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பு 6.5 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகக் சற்றே குறைக்கப்பட்டுள்ளது.

எனினும், 2027 இல் இந்தியாவின் வளர்ச்சி 6.7 சதவீதமாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களின் வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமளவுக்குப் பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.