உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான “நம்பியோ”…

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அத்தோடு, ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்த உலகின் மிகப்பெரிய தரவு சேகரிப்பான “நம்பியோ” இணையதளம், 2026 ஆம் ஆண்டின் இடைக்கால போக்குவரத்து குறியீட்டின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.நெரிசல் குறைந்த நாடு அந்த அறிக்கையின்படி, உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாக நைஜீரியா பதிவாகியுள்ளதுடன், கொஸ்டரிகா இரண்டாவது இடமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடாகவும், ஆஸ்திரியா மற்றும் பின்லாந்து ஆகியவையும் மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் உள்ள நாடுகளாகவும் பதிவாகியுள்ளன. இந்த நிலையில், ஒரு பயணத்தில் செலவழிக்கப்படும் நேரம் மற்றும் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு இந்த போக்குவரத்து நெரிசல் தரவுகள் தயாரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!