வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join ‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World – TTW) நிறுவனத்தினால் 2026ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட உலகின் மிகச்சிறந்த 50 உணவுத்தளங்களின் (Food Destinations) பட்டியலில் இலங்கையும்…
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World – TTW) நிறுவனத்தினால் 2026ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்ட உலகின் மிகச்சிறந்த 50 உணவுத்தளங்களின் (Food Destinations) பட்டியலில் இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மாத்திரமே உரித்தான நறுமணமிக்க வாசனைத்திரவியங்கள் மற்றும் பல நூற்றாண்டு கால கலாசார பாரம்பரியம் உள்ளிட்ட பல காரணிகள் இந்த சர்வதேச அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் நுவரெலியா போன்ற நகரங்களில் காணப்படும் தனித்துவமான உணவு கலாசாரமும் உள்நாட்டு சுவைகளும் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
உணவு என்பது வெறும் போஷாக்கு மாத்திரமல்ல, அது ஒரு நாட்டின் கலாசார அடையாளத்தையும் சமூகத்தையும் பிரதிபலிக்கும் ஓர் அரிய அனுபவம் என்பதை இந்தத் தரப்படுத்தல் உறுதிப்படுத்தியுள்ளது.
இப்பட்டியலில் இலங்கை 50 ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதுடன், முதல் ஐந்து இடங்களை முறையே மெக்சிகோ, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தனதாக்கியுள்ளன.
இலங்கையின் வெவ்வேறு பிரதேசங்கள் பல்வேறு வகையான உணவுகளுக்காக இந்தத் தரப்படுத்தலின் ஊடாக விசேடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய கொழும்பு, காலி, கண்டி, நீர்கொழும்பு, எல்ல, யாழ்ப்பாணம், மிரிஸ்ஸ, நுவரெலியா, ஹிக்கடுவ மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்கள் உணவுக்கான தனித்துவமான சுற்றுலாத்தலங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

