மட்டக்களப்பு நகருக்குள் இணையும் பிரதான பாலங்களுள் ஒன்றான புதுப்பாலம் திடீரென உடைந்து போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…

மட்டக்களப்பு நகருக்குள் இணையும் பிரதான பாலங்களுள் ஒன்றான புதுப்பாலம் திடீரென உடைந்து போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்கள் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுடன் தற்போது அப்பகுதிக்கு நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் .

குறித்த பாலம் அமைந்துள்ள வீதியின் முக்கியத்துவம் குறித்து துரிதகதியில் அரச உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக தற்காலிக பாலம் அமைக்கும் முயற்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மேற்கொண்டு இருந்த நிலையில் ,

அரசின் முக்கிய அமைச்சரான இ. சந்திரசேகர் அவர்களை இரவோடு இரவாக அங்கு அழைத்து சென்று உடைந்த பாலத்தின் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தியதுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அவர் ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆட்சிக்காலத்தில் புனரமைக்கப்பட்ட மட்டு நகர் புதுப்பாலம் உடைந்துவீழ்ந்தது