உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது. மார்பு வலி : இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக் கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்.வயிறு வலி : திடீரென ஏற்படும் வயிற்று வலி குடல் புண…
உடலைப் பொருத்தவரையில் பல இடங்களில் வலி ஏற்படும். ஆனால், ஒரு சில வலிகளை நாம் உதாசீனப்படுத்தக் கூடாது.
மார்பு வலி : இடது கை அல்லது தாடை பகுதிக்கு வலி பரவினால், இதயக் கோளாறு, மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய எச்சரிக்கையாக இருக்கலாம்.வயிறு வலி : திடீரென ஏற்படும் வயிற்று வலி குடல் புண், பித்தப்பை கோளாறு, அலசர் போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
கால் வலி : காலின் பின் பகுதியில் வீக்கம், இறுக்கம், வெப்பம் போன்ற உணர்வுகளுடன் வலி இருந்தால், அது இரத்த உறைவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
பல் வலி : பல்லில் தொடர்ந்து வலி இருந்தால் ஈறுகளில் தொற்று இருப்பதைக் குறிக்கலாம்.முதுகு வலி : முதுகின் அடிப்பகுதி, நடுப்பகுதியில் வலி ஏற்பட்டால் முதுகுத்தண்டுவட பகுதியில் அழுத்தம், சிறுநீரகக கோளாறுகள் ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
திடீர் தோள்பட்டை வலி : தோள்பட்டையில் ஏற்படும் திடீர் வலி, நுரையீரல், பித்தப்பை தொடர்பான பிரச்சினைகளை சுட்டிக்காட்டும்.
திடீர் தலைவலி : மூளையில் இரத்தக்கசிவு, பக்கவாதம் அல்லது இரத்த அழுத்த மாற்றங்களைக் குறிக்கும்.பாத வலி : பாதங்களில் வலி நீரிழிவு நோய் அல்லது நரம்பு சேதம் அடைவதற்கான அறிகுறி.
கண் வலி : கண்களில் வலி, அழுத்தம், பார்வை மங்கல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் தொற்றாகவும் இருக்கும்.

