தாபி மாவட்டத்தின் வலோட் பகுதியில் உள்ள அம்பாக் கிராமத்தில் ஆசிரமப் பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளுக்கு இடையே வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.சம்பவத்தன்று இரவு, பள்ளியின் சாப்பாட்டுக் கூடத்தில் மாணவிகள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அ…

தாபி மாவட்டத்தின் வலோட் பகுதியில் உள்ள அம்பாக் கிராமத்தில் ஆசிரமப் பள்ளி ஒன்றில் தங்கிப் படிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளுக்கு இடையே வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.சம்பவத்தன்று இரவு, பள்ளியின் சாப்பாட்டுக் கூடத்தில் மாணவிகள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவி உணவு வாங்குவதற்காக எழுந்துள்ளார்.மாணவி கைது உடனே அவரது தோழியான மற்றொரு மாணவி, அருகில் இருந்த மேஜையிலிருந்து தனக்கு ஊறுகாய் பாட்டிலை எடுத்து வருமாறு கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி ஊறுகாய் எடுத்துத் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, சாப்பாட்டு மேஜையில் இருந்த கத்தியை மறைத்து எடுத்துக்கொண்டு, சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவச் சென்ற அந்த மாணவியைப் பின்தொடர்ந்து குளியலறைக்குச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்றதோடு, கத்தியால் அவரது கைகளிலும் உடலிலும் கொடூரமாகக் குத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட மாணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் இருந்த மாணவியை மீட்டு உடனடியாக சூரத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அம்மாணவியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய 15 வயது மாணவியைக் கைது செய்த பொலிஸார், அவரை வதோதராவில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.