உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join 2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதற்…

உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வௌியாகின

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/home.htm ஆகியவற்றின் ஊடாக அந்தப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.

இந்த மீளாய்வு பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் அல்லது பிரச்சினைகள் காணப்படின், பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக, 1911 என்ற உடனடி அவசர அழைப்பு இலக்கம் அல்லது 011 27 84 208, 011 27 84 537 மற்றும் 011 27 85 922 ஆகிய பாடசாலைப் பரீட்சைகள் அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு இலங்கை பரீட்சைத் திணைக்களம் பரீட்சார்த்திகளை கோரியுள்ளது.