2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவரினா…

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) நான்கு வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவரினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌதிகவியல் வினாத்தாள் 1 இல் இடம்பெற்ற 17, 18, 19 மற்றும் 46 ஆகிய வினாக்கள் பிழையானவை என்றும், அவற்றுக்கு சரியான பதில்களைத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வினாத்தாளில் ஏற்பட்டுள்ள குளறுபடி தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதுடன், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் ஒரு இலவசப் புள்ளியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், நான்கு வினாக்களும் பிழையானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், 46ஆவது வினாவுக்கு மாத்திரம் இலவசப் புள்ளி வழங்குவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

எனவே, பிழையானதாகக் குறிப்பிடப்படும் 17, 18, 19 மற்றும் 46 ஆகிய நான்கு வினாக்களுக்கும் தலா ஒரு புள்ளி வீதம் மொத்தம் நான்கு புள்ளிகளை அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் மாணவர்களின் உரிமைகள் மற்றும் பரீட்சை நடைமுறைகளில் சமத்துவம் ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15