தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.லங்கா சிறியின் நேருக்கு…

தொடர்ச்சியாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற சிறைச்சாலை மோதல்கள் திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது இதில் வேறு ஏதும் சதிகள் காணப்படுகிறதா? என  சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தமிழ் ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.லங்கா சிறியின் நேருக்கு நேர் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹர சிறைச்சாலையில் மோதல் இடம்பெற்று சில மணி நேரத்திற்குள் அங்கு வருகைத்தந்திருந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது தொடர்பில் விசாரித்தால் இது திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதில் கிடைத்து விடும்.

அன்று வருகைத்தந்திருந்தவர்களுள் ஒருசிலர் நாமல் ராஜபக்சவினுடைய கட்சியினரா? என்ற விமர்சனங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றன. நாமல் ராஜபக்சவுடன் இணைந்திருந்தவர்களுடைய சில புகைப்படங்களும் அன்றைய காணொளிகளில் வெளியாகி இருந்தன. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் ராஜபக்சர்கள் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் தற்பொழுது நிரூபிக்கப்பட்டு வருகின்ற சந்தர்ப்பத்திலே அவற்றை மூடிமறைப்பதற்காக இவ்வாறான கலவரங்களை இவர்கள் தோற்றுவிக்கலாம் என்ற சந்தேகம் தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான இன்னும் பல முக்கிய விடயங்களை இந்த நிகழ்ச்சியின் ஊடாக விரிவாக பார்க்கலாம்..