ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் - ஷேனன் பகுதியில் திங்கட்கிழமை (29) அன்று வாகனம் ஒன்றில் அடிபட்டு சிறுத்தைக்குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது. தாயிடமிருந்து பிரிந்த இந்தச் சிறுத்தைக்குட்டி, வீதியைக் கடக்க முற்பட்டபோதே அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றில் அடிபட்டு உயிரிழந்திருக்கலா…

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், ஹட்டன் - ஷேனன் பகுதியில் திங்கட்கிழமை (29) அன்று வாகனம் ஒன்றில் அடிபட்டு சிறுத்தைக்குட்டி ஒன்று உயிரிழந்துள்ளது.

தாயிடமிருந்து பிரிந்த இந்தச் சிறுத்தைக்குட்டி, வீதியைக் கடக்க முற்பட்டபோதே அவ்வழியாக வந்த வாகனம் ஒன்றில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து நல்லத்தண்ணி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.