ஸ்பெயினின் சான் ஜேவியர் சர்வதேச வான்வெளித் திருவிழாவில் (Festival Aéreo internacional San Javier), ஸ்பானிஷ் விமானப்படையின் 'பாபே' (PAPEA - Patrulla Acrobática de Paracaidismo del Ejército del Aire) குழுவினர் மேற்கொண்ட வான்வெளி சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன. தேசிய…

ஸ்பெயினின் சான் ஜேவியர் சர்வதேச வான்வெளித் திருவிழாவில் (Festival Aéreo internacional San Javier), ஸ்பானிஷ் விமானப்படையின் 'பாபே' (PAPEA - Patrulla Acrobática de Paracaidismo del Ejército del Aire) குழுவினர் மேற்கொண்ட வான்வெளி சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தன.

தேசியக் கொடியுடன் அதிவேகமாக வானிலிருந்து கீழே பாய்ந்து, அவர்கள் மேற்கொண்ட இந்த சாகசங்கள் திருவிழாவிற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

சான் ஜேவியர் மாநகர சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வு, உள்ளூர் மற்றும் சர்வதேச வான்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.