2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார். புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த (29) இரவு பாசிக்குடாவில் அமைந்துள்ள தனியார் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது. 2025–2026 ஆம் ஆண்டிற்கான கழகத் தலைவர் லயன் எஸ். க…
2026–2027 ஆம் ஆண்டிற்கான வாழைச்சேனை நகர லயன் கழகத்தின் புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா பதவியேற்றுக் கொண்டார்.
புதிய நிர்வாக சபையின் பதவியேற்பு விழா கடந்த (29) இரவு பாசிக்குடாவில் அமைந்துள்ள தனியார் சுற்றுலா விடுதியில் நடைபெற்றது.
2025–2026 ஆம் ஆண்டிற்கான கழகத் தலைவர் லயன் எஸ். கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய தலைவராக லயன் எஸ். யோகராஜா உத்தியோகபூர்வமாக பதவியைப் பொறுப்பேற்றார்.
இதனுடன், கழகத்தின் செயலாளராக லயன் கே. சசிகரனும், பொருளாளராக லயன் கே. ஞாநேஸ்வரனும் பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்வின் போது கழகத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு லயன் சின்னங்களும் அணிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306D10 இன் மாவட்ட ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் கலந்துகொண்டு புதிய நிர்வாக சபையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
f

