கோஹுவளை பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான போலி புகைப்படம் தொடர்பில், வதந்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ​பொலிஸார் எச்சரித்துள்ளனர். தவறான தகவல்கள், வதந…

கோஹுவளை பாலத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான போலி புகைப்படம் தொடர்பில், வதந்திகளையும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களையும் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ​பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தவறான தகவல்கள், வதந்திகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களைப் பரப்புவது சமூகத்திற்குப் பெரும் தீங்கை விளைவிப்பதுடன், இலங்கையின் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சமூக வலைதளப் பயனாளர்கள் ஏதேனும் பதிவுகளையும் பகிர்வதற்கு முன்பு அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 'சரிபார்த்தல், உறுதிசெய்தல் மற்றும் பொறுப்புடன் பகிர்தல்' (Check, Verify and Share Responsibly) என்ற மூன்று அடிப்படை விதிகளைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தகவலின் மூலத்தை ஆராய்வதுடன், நம்பகமான மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்திய பின்னரே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டுப் போலிச் செய்திகளைப் பரப்பும் நபர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றங்கள் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ​பொலிஸார் எச்சரித்துள்ளனர்.