சுதத் எச். எம். ஹேவா ஹட்டன் வனராஜா, மஸ்கெலியா காட்மோர் ஆகிய தோட்டங்களில் குளவிக்கொண்டுக்கு உள்ளான 17 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கோயா வனராஜா வத்துச் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது திங்கட்கிழமை (31) அன்று குளவி கொட்டியதில் 1…

சுதத் எச். எம். ஹேவா ஹட்டன் வனராஜா, மஸ்கெலியா காட்மோர் ஆகிய தோட்டங்களில் குளவிக்கொண்டுக்கு உள்ளான 17 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா வனராஜா வத்துச் பிரிவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த  தொழிலாளர்கள் மீது திங்கட்கிழமை (31) அன்று குளவி கொட்டியதில் 14 பெண் தொழிலாளர்கள் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வனராஜா மேல் பிரிவின் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளை, அங்குள்ள மரமொன்றில் கட்டப்பட்டிருந்த தேனீக் கூடு கலைந்ததால், அங்கிருந்த குளவிகள் இத்தொழிலாளர்களைத் தாக்கியுள்ளன. இதனால் அவர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தொடர்பு கொண்டு வினவியபோது, டிக்கோயா கிளங்கன் மருத்துவமனைமருத்துவ அதிகாரியொருவர் கூறுகையில், "டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இடம்பெற்ற குளவிக்கொட்டு தாக்குதலில் 14 பெண் தொழி லாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

மேலும், காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மஸ்கெலியா காட்மோர் குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா காட்மோர் தேயிலைத்தோட்டத்தில்  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த, 3 பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுள் ஒரு பெண் தொழிலாளர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், மற்ற இரு பெண் தொழிலாளர்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இல்லை எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.