வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயிர் சேதங்களுக்கா…

வறண்ட வானிலை காரணமாக சுமார் 8000 ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (01.09.2026) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பயிர் சேதங்களுக்கான அவசரத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ. 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அவசரத் திட்டம்அதன்படி, அவசரத் திட்டத்தின் கீழ் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் 1,923 ஏக்கர் பயிர் சேதம் பதிவாகியுள்ளது. அந்த மாவட்டமே பயிர் சேதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.தற்போது நிலவும் வறண்ட வானிலையால் சேதமடைந்த பயிர்களுக்கு முதல் கட்டமாக ரூ. 3,00 கோடி இழப்பீடு வழங்கும் அவசரத் திட்டம் இதுவாகும்.இழப்பீடு அதன்படி, நெல், மக்காச்சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் போன்ற பயிர்களுக்கு, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 1,00,000 இழப்பீடு வழங்கப்படும். சேதமடைந்த நிலப்பரப்புகளையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இந்தப் பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் அருகிலுள்ள விவசாய சேவைகள் திணைக்களத்தின் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளரையோ அல்லது விவசாய அபிவிருத்தி அல்லது கள அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.