வறண்ட வானிலை தொடரும்! வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join எல் நினோ தாக்கம் மற்றும் தென்மேற்குப் பருவமழை வலுவிழந்தமை காரணமாக அடுத்த மாதமும், பின்னர் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியிலும் நாடு முழுவதும் வறண்ட வானிலை நில…
வறண்ட வானிலை தொடரும்!
வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்
💬 Join
எல் நினோ தாக்கம் மற்றும் தென்மேற்குப் பருவமழை வலுவிழந்தமை காரணமாக அடுத்த மாதமும், பின்னர் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியிலும் நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே (Ajith Wijemanne) தெரிவித்துள்ளார்.
எனினும், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புதுப்பிக்கப்பட்ட வானிலை விபரங்கள் நாளை மறுநாள் (6ஆம் திகதி) வெளியிடப்படும்.
எல் நினோ பாதிப்புகளைக் குறைப்பது குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெண்டி தலைமையில் நேற்று அமைச்சகத் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை ஆராய்ந்து, அடுத்த இரு வாரங்களுக்குள் ‘தேசிய செயல் திட்டம்’ அறிவிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

