Home செய்திகள் வசந்த கரன்னாகொட கைது வசந்த கரன்னாகொட கைது Editorial / 2026 ஜூலை 03 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}} முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார். 2006 ஆம்…
Home செய்திகள் வசந்த கரன்னாகொட கைது
வசந்த கரன்னாகொட கைது
Editorial /
2026 ஜூலை 03 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவிற்கு (Executive Branch) மாணவ அதிகாரிகளை (Cadet Officers) இணைத்துக் கொள்ளும் போது, உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவை நிறைவேற்றுப் பிரிவின் மாணவ அதிகாரியாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்குப் புறம்பாக பிரித்தானிய ராயல் கடற்படைக் கல்லூரியின் (British Royal Naval College) பயிற்சிப் பாடநெறி ஒன்றுக்காக அரசாங்கப் பணத்தைச் செலுத்தி அவரைப் பங்கேற்கச் செய்தமை தொடர்பான சம்பவம் ஒன்றின் அடிப்படையிலேயே முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
RECOMMENDED
TODAY'S HEADLINES
Comments - 0
அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd

