Home செய்திகள் வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது Editorial / 2026 ஜூலை 24 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}} வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது வத்தளை, கதிரான பகுதியில…

Home செய்திகள் வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது

Editorial   /

2026 ஜூலை 24 , பி.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

வத்தளை துப்பாக்கிச் சூடு: இரு பெண்கள் உட்பட நால்வர் கைது வத்தளை, கதிரான பகுதியிலுள்ள பள்ளியவத்தையில் இடம்பெற்ற உயிரைப் பறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் கீழ், இரண்டு பெண்கள் உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான உத்தரவைப் பெறக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.

மேலும், இத்துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணைகளை மேற்கொள்ள ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று (23) பள்ளியவத்தை பகுதியில் நடைபெற்ற சிறுவன் ஒருவனின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.

மட்டக்குளியைச் சேர்ந்த "கூடு ரொஷான்" என அறியப்படும் போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரை இலக்கு வைத்தே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், துப்பாக்கிதாரியின் இலக்கு தவறி, அருகில் நின்றிருந்த 39 வயதான அப்பாவி நபர் ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.

RECOMMENDED

TODAY'S HEADLINES

Comments - 0

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Reply To: Eranda - cb chds hcdsh cdshcsdchdhd