தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளது.…
தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள 3 பில்லியன் பயனர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் இந்த வசதி வழங்கப்படவுள்ளது.
இது கட்டாயமானதொன்றல்ல என்பதுடன், விருப்பமுள்ளவர்கள் மட்டும் தங்களுக்குத் தேவையான பயனர் பெயரை (Username) ஒதுக்கிப் பெற்றுக்கொள்ள முடியும்.இதேவேளை, தாங்கள் தேர்ந்தெடுத்த பயனர் பெயரை எந்த நேரத்திலும் நீக்குவதற்கோ அல்லது மாற்றுவதற்கோ பயனர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
ஒரு பயனர் பெயருக்காக அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் அல்லது குறியீடுகளை மட்டுமே பயன்படுத்த முடியும்.
பிரபல அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களின் பெயர்களை மற்றவர்கள் போலி கணக்குகளுக்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வட்ஸ்அப் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு இன்னமும் தொலைபேசி இலக்கம் கட்டாயமாகும் என்ற போதிலும், இந்த பயனர் பெயர் (Username) அம்சம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு மற்றவர்களால் உங்களது தொலைபேசி இலக்கத்தைப் பார்க்க முடியாது.
இதன் மூலம், குறிப்பாக குழு அரட்டைகளில் (Group Chats) உள்ள அறிமுகமில்லாத நபர்களுடன் தங்களது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதவர்களுக்கு அதிகளவிலான தனியுரிமைப் பாதுகாப்பு (Privacy) கிடைக்கும் என வட்ஸ்அப் நிறுவனத்தின் தயாரிப்புத் தலைவர் அலிஸ் நியூட்டன்-ரெக்ஸ் (Alice Newton-Rex) தெரிவித்துள்ளார்.

