வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிரு…

வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைகோரிய மனு வவுனியா மேல்நீதிமன்றில் இன்று (3) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்குத் தொடுநர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.

முன்னாள் வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். மனுவை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்திற்கு ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்தது.