குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக குளுநாகல தலைமையகக் காவல் நிலையம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில…

குருநாகலையில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில், பதினான்கு வயது மாணவி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், பாடசாலையின் அறிவியல் ஆசிரியர் ஞாயிற்றுக்கிழமை (30) கைது செய்யப்பட்டதாக குளுநாகல தலைமையகக் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் அதே பாடசாலையில் அறிவியல் பாடம் கற்பிக்கும் 52 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.

கடந்த ஜூன் மாதத்தில் இந்தத் துஷ்பிரயோகம் நடந்துள்ளது.முன்பும் பாலியல் குற்றச்சாட்டில்  சிக்கிய ஆசிரியர்அதுபற்றி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் அது குறித்துப் பாடசாலை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், பாடசாலை அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைப் பாதுகாக்கும் கொள்கையைக் கடைப்பிடித்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதன் பின்னர், அது குறித்துக் குருநாகல் வலயக் கல்வி அலுவலகத்திற்கு வந்த புகாரின் பேரில் விசாரிக்கப்பட்டு, சந்தேக நபர் குருநாகல் பகுதியிலேயே அமைந்துள்ள மற்றொரு சிறிய பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் பதிவாகி இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருந்த போதிலும், தனது மகளுக்கு இழைக்கப்பட்ட துஷ்பிரயோகம் தொடர்பாகச் சந்தேகத்திற்கிடமான ஆசிரியருக்கு எதிராக அதிகாரிகள் எந்தக் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவியின் தந்தை, குருநாகல் தலைமையகக் காவல் நிலையத்தின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் கடந்த 25 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார்.

அதற்கமைய, விசாரணை நடத்திய காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

அதேபவேளை கைதான ஆசிரியர் இதற்கு முன்னரும் குருநாகல் நகரில் உள்ள மற்றொரு பிரதான கலவன் பாடசாலையில் பணியாற்றியபோது, மாணவி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர் என்பதும் , சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அவர் இந்தப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15