டுபாயில் கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்கா' என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழங்கிய உளவுத்தகவல்களின…

டுபாயில் கைது செய்யப்பட்ட 'வெல்லே சாரங்கா' என்று அழைக்கப்படும் சாரங்க பிரதீப் எனும் பிரபல பாதாள உலகக்குற்றவாளியை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) வழங்கிய உளவுத்தகவல்களின் அடிப்படையில் டுபாயில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் வைத்து டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், வெல்லே சாரங்கா உள்ளிட்ட ஒன்பது குற்றவாளிகள், அடுத்த சில வாரங்களில் இலங்கைக்குக் அழைத்துவரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இரகசியமாக போதைப்பொருட்களை அனுப்பும் நடவடிக்கை

இவர்கள் டுபாயில் பதுங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இலங்கைக்குள் போதைப்பொருட்களை இரகசியமாக அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வெல்லே சாரங்கா மீது கொலை, போதைப்பொருள் மற்றும் ஆயுதக்கடத்தல், மிரட்டிப்பணம் பறித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள், பாதாள உலகத்தலைவரான லலித் கண்ணங்கராவை கைது செய்வதற்காக டுபாய்க்கு சென்று, அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையில் ​​மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள், டுபாய் பொலிஸ் அதிகாரிகளுக்கு வெல்லே சாரங்கா என்ற பாதாள உலகத் தலைவர் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளனர்.

அதன்படி, டுபாய் பொலிஸார் பல வாரங்களாக நடத்திய தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, டுபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த வெல்லே சாரங்கா உட்பட 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி போதைப்பொருள் கடத்தல் கைது செய்யப்பட்ட நேரத்தில், இந்த குற்றவாளிகளிடமிருந்து கொக்கைன் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

வெல்லே சாரங்கா ஆடம்பர ஹோட்டல்களில் தங்கியிருந்தபடியே பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த கடத்தல்காரர்களுடன் இணைந்து, போதைப்பொருட்களை இழுவைப் படகுகளில் ஏற்றி இலங்கைக்கு அனுப்பும் கடத்தலிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

போதைப்பொருள் தகராறு காரணமாக மோதரை பகுதியில் எவோனி சுதர்ஷனி பெர்னாண்டோ என்ற பெண்ணை சுட்டுக்கொன்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்குளிய, கொட்டஹேன, மோதரை உள்ளிட்ட பல பகுதிகளில் பல கொலைகளை இயக்கியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தற்போது டுபாய் பொலிஸ் காவலில் உள்ள வெல்லே சாரங்கா உள்ளிட்ட 9 குற்றவாளிகளை விரைவாக இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து இலங்கை பொலிஸாருடன் பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.