வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபரான பெண் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஹொரணை விசேட குற்ற…
வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சந்தேக நபரான பெண் 20 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (26) காலை அளுபோமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் ஹொரணை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

