ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது. இதன்படி, முதல் கட்டமாக இந்த பயிற்சித்திட்டம் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல…

ஜப்பான் மற்றும் ருமேனியாவில் பணிபுரிய முதன்முறையாக வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக பயிற்சி திட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, முதல் கட்டமாக இந்த பயிற்சித்திட்டம் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பணியகத்தின் பன்னிப்பிட்டிய பயிற்சி மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி திட்டங்களுக்கான பதிவு

எதிர்காலத்தில், நாட்டின் பரப்பளவைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் அமைந்துள்ள பணியகத்தின் பிற பயிற்சி மையங்களிலும் இது தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.செப்டம்பர் 15ஆம் திகதி முதல் இந்த பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றிருப்பது கட்டாம் என்றும், இவை இல்லாமல், பணியகத்தில் பதிவு பெற முடியாது என்றும் பணியகம் தெரிவிக்கின்றது.

இந்த வழிகாட்டுதல் பயிற்சித்திட்டத்தின் மூலம், அந்தந்த நாடுகளின் கலாச்சாரம், பணியிடப் பாதுகாப்பு, பணத்தை கையாளுதல், சுகாதாரம் போன்றவை குறித்த விழிப்புணர்வு வழங்கப்படுகின்றது.

இந்த வழிகாட்டுதல் பயிற்சித் திட்டங்களுக்கான பதிவை, நாடு முழுவதும் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.